நினைவு அஞ்சலி
பிறப்பு
21 11 1940
இறப்பு
12 12 2020
அமரர் அதிவண. பேரருட் கலாநிதி விக்டர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை
5ம் ஆண்டு இதய அஞ்சலி
ஆண்டகை

இலங்கையின் பாஷையூர் கத்தோலிக்க திரு அவையின் மைந்தனும், அமலமரி தியாகிகள் சபையைச் சார்ந்தவரும், பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணியாற்றிய பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை அவர்கள் இன்று பாகிஸ்தானில் காலமாகிவிட்டார்.

ஆண்டகை அவர்கள் 1940/11/21ல் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார். தனது பாடசாலைக் கல்வியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்தார்.

இறை அழைத்தலுக்குப் பணிந்து குருமடம் நுழைந்து களுத்துறையில் 1959ல் தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்தார். கண்டி இலங்கை அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல், இறையியல் கல்வியை நிறைவுசெய்து 1966ல் அமலமரி தியாகிகள் சபையின் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

இலங்கையில் பல இடங்களில் பணியாற்றி பின் 1973ல் பாகிஸ்தான் சென்றார். பல அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் துன்புற்ற மக்களுக்கும், இளையோருக்கும் இறைபணியாற்றினார்.

தகவல்: கத்தோலிக்க சபை
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்

Summary

View Similar profiles