உரும்பிராயை பிறப்பிடமாகவும் நிம்மதி வீட்டை முன்னைய வதிவிடமாகவும், Ajax, Ontario, Canada வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தையல் ஆசிரியை திருமதி பாக்கியம் தர்மலிங்கம் அவர்கள் கடந்த ஞாயிறன்று 13-Dec-2020, Ajax, Ontario, Canada வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா - பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்ற தவமணி, சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் குணலக்ஷ்மி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
தர்மலோஜினி (பேபி - லண்டன்), சுரேஷ்குமார் (லண்டன்), ரமேஷ் (கனடா), கேதிஸ் (கனடா), கோணேஷ் (லண்டன்), தர்ஷினி (கனடா) , தாரணி (கனடா) ஆகியோரின் அருமைத்தாயாரும்,
கருணாரட்ணம், பத்மாதேவி, லெனி, சசிகலா, வடிவாம்பிகை, மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதீஷ் - சுரேக்கா, கவிதா, யதுர்ஷினி - ரொம், தனுப்பிரியா, கரோலயின், யுதீஷ், சங்கீஷ், சாருகாஷ், குலனேஷ், குகனேஷ், யுவனேஷ், ஜோடேஷ், சந்தோஷ், லதீஷ், சோபியா, லுவனேஷ் ஆகியோரின் ஆருயிர் பாட்டியும், கற்ரியாவின் அருமைப் பூட்டியுமாவார்.
ஈமைக் கிரிகைகள் 20.12.2020 ஞாயிறுக்கிழமை
கனடா நேரம் - மதியம் 12:30 முதல் மாலை 2:30 வரை
பிரித்தானிய நேரம் - மாலை 17:30 முதல் மாலை 1930 வரை
ஐரோப்பிய நேரம் - மாலை 18:30 முதல் மாலை 20:30 வரை
இலங்கை நேரம் - அதிகாலை 02:00 முதல் அதிகாலை 04:00 வரை
பின்வரும் தொடர்பை அழுத்தி காணொளி ஊடாக பார்வையிடலாம்:
https://video.ibm.com/channel/s5CHH26bSXz
தற்போதைய கனேடிய அரசாங்கத்தின் COVID-19 சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய குடும்ப அங்கத்தினர் மட்டுமே இந்த எல்லா நிகழ்வுகளில் பங்குபற்ற முடியும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.