WE REMEMBER
Birth
9 1 1965
Death
22 1 2021
Late K.Kangatharan ( Gemini) Ganesh
5th Year Remembrance
தேனீ இணைய தள ஸ்தாபகர்
யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன்
< Back to profile
Write Tribute
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அராஜகத்திற்கு எதிராக, தமிழ் சமூகத்தில் ஜனநாயகச் சூழலை மீள ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் எங்களுடன் கைகோர்த்து பயணித்த தோழர் ஜெமினியை நாங்கள் இழந்து நிற்கின்றோம். மரணம் எந்தக்கணமும் எங்களை அரவணைத்துக் கொள்ளும் என்பதற்கு தோழரின் இளவயது மரணம் சிறந்த உதாரணமாக உள்ளது. கொரோனா என்னும் கொடிய நோய் ஜெமினியின் மரணத்தைத் துரிதப்படுத்தியுள்ளது என்பது மிகவும் வேதனையான விடயம். சுதந்திரமான, அச்சமற்ற ஊடகம் இல்லாமல் ஜனநாயகச் சூழலை ஏற்படுத்தமுடியாது என்பதை தனது சொந்த போராட்ட அனுபவங்களினூடாக உணர்ந்த ஜெமினி, தமிழ் ஊடகத்துறைக்கு ஐரோப்பிய சூழலில் பெரும் பங்காற்றியுள்ளார். இன்றிருப்பது போலல்லாது, 20 வருடங்களுக்கு முன்னர் சமூக வலைத்தள ஊடகங்கள் பலமானதாக இருக்கவில்லை. யுத்தமும் குருதியுமாக கழிந்து போய்விட்ட ஏறத்தாள இரு தசாப்தகாலத்தின் பின்னரே, 'தேனீ' இணையத்தளத்தின் வருகை நிகழ்ந்தது. 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பெரிய பிரகடனங்கள் எதனையும் உதிர்க்காமல் மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று 'தேனீ – ஜெமினி' என்ற அவரது பெயருக்குப் பின்னால், அவரது பாரிய உழைப்பு இருந்தது. உலகெங்கிலும் வாழ்ந்த மாற்றுக்கருத்தாளர்களின், ஜனநாயகவாதிகளின் பலம் வாய்ந்த ஒரு குரலாக 'தேனீ' இணையத்தளம் திகழ்ந்தது. 'தேனீ' இணையத்தை தனது சொந்தப்பெயரில் உருவாக்கி, நிர்வகித்ததால் ஜெமினி பல இன்னல்களால் சூழப்பட்டிருந்தார். அவற்றிற்கெல்லாம் பல வருடங்களாக மிகவும் துணிச்சலுடன் அவர் முகங்கொடுத்து, வெற்றிகரமாக 'தேனீ' இணையத்தை எந்த தங்குதடையுமின்றி வெளிக்கொணர்ந்தார். ஏகபிரதிநிதித்துவம் தலைவிரித்தாடிய அக்காலகட்டத்தில், ஜெமினியின் துணிவும் உற்சாகமும் பலரை 'தேனீ' இணையத்தில் எழுதத் தூண்டியது. அதுபோலவே தேனீ இணையம் பலதரப்பட்டவர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்து, எழுதுபவர்களை ஊக்கிவித்தது. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் பல தமிழ் மொழி சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்திருந்தாலும், இணையவழி ஊடகத்தில் 'தேனீ' காத்திரமானதொரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது. எவரது கருத்துக்களையும் உன்னிப்பாகக் கேட்டு, தன்னுடைய கருத்துக்களை தயக்கமின்றி முன்வைத்து, விவாதித்து, சகல தரப்பிரனரையும் அரவணக்கும் சிறந்த பண்பினை ஜெமினி கொண்டிருந்தார். அதனாலேயே ஜெமினியின் திடீர் மரணம் எம்மைப்போலவே, இன்று பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி கண்கலங்க வைத்துள்ளது. தோழர் ஜெமினியின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, தோழருக்கு எங்கள் அஞ்சலியையும் செலுத்துகிறோம். தமிழரசன் (ஜெர்மனி) பாலசூரியன் (நெதர்லாந்து) 25.01.2021
Tribute in Light
தேனீ' என்பது பத்தோடு பதினொன்றான இணையத்தளமல்ல. பாசிசத்தின் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஜெமினி என்னும் தோழனின் நெஞ்சுரத்தில் பிரதிபலிப்பு ஆகும். ஒரு பெரும் போர் சூழலில் பரபட்ஷமற்ற ஊடக தர்மத்தை பேணி பாதுகாப்பதில் தேனீ இணையத்தளம் வகித்த பாத்திரம் மிகமிக காத்திரமானது. விடுதலையின் பெயரில் புறந்தள்ளப்பட்ட சாமானிய மக்களின் குரலாக தேனீ ஒலித்தது. தேனீ இணையத்தளத்தின் செயற்பாடுகளில் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையும் கட்டிக்காக்க முழுமையாக தோழர் ஜெமினி ஒருபோதும் பின்நிற்கவில்லை. மாற்று கருத்துக்களுக்காக குரல்கொடுப்பதென்பது தற்கொலைக்கு சமனான சூழலொன்றில் தோழர் ஜெமினியின் பங்களிப்பானது மதிக்கத்தக்கது மட்டுமன்றி மகத்தானதுமாகும். தமிழ் சூழல் என்பதே புலி-பாசிசமாய் மாறி நின்ற அந்த இருள் நிறைந்த காலங்களில் அச்சமும் கொலை பயமுறுத்தல்களும் அவரை எதுவுமே செய்துவிடவில்லை. கிழக்கு போராளிகளின் ஜனநாயக மீள் வரவின் போது அவர்களின் நியாயங்களை வெளிக்கொணரவும் கிழக்கில் ஒரு ஜனநாயக மீட்சியையும் இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்தவும் எமது முன்னணி வெளியிட்டு வந்த அத்தனை அறிக்கைகளையும் பிரசுரிப்பதில் தோழர் ஜெமினி காட்டிய பன்மைத்துவத்தை மதிக்கும் பக்குவத்துக்கு நாம் என்று தலைவணங்குகின்றோம். தோழர் ஜெமினிக்கு எமது இதய அஞ்சலிகள் உரித்தாகட்டும். தோழர் ஜெமினியின் ஈடு செய்யமுடியாத இழப்பில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் தோழமை சக்திகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி [email protected]