ஊர்காவற்றுறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு,
தற்போது கனடாவில் வாழ்ந்தவரான
திரு. ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்கள்
01.12.2021 புதனன்று கனடாவில் காலமானார்
என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மனுவேற்பிள்ளை - றோசலீன் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சைமன் - றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேசி லூட்ஸ் (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவில் வதியும் லூட் வதனா, நிக்சன், நிறஞ்சன், யூட் நிர்மலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனடாவில் வதியும் சுரேந்திரன்(நிறாஜ்), யூட் நிமலேந்திரன்(நிமால்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோதி, மிருணாளினி, கொட்வின்,துஷியந்தா, சிறானி, வினிதா, ஆன் சுவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விக்டர், லூயிஸ், ஸ் ரீபன் (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), திருமதி மேரி கிளாறா அல்பிறட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான றீற்றா லூயிஸ்,அல்பிரட் யோசப், ஹரியற் ஸ்ரீபன் மற்றும்
லூசியா ஜோசேபின், மேரி மெக்டலின், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா(இராஜேஸ்) மற்றும் பீற்றர்போல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷெரீனா, சியானா, றியானா, நிதுஷன், நிஷாதனா, றெனோஜன், நிலக்ஷன், ஜெலினா, றாயன்,லெறோன், றியோன், ஜொயானா, றெனோன், லெவினா, கசில்டன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
றுபினா, மறீனா, அலன்பீன், றொபின்ஜீன், சோபனா பிறேமினி, அன்ரன் றவிறாஜ் காலஞ்சென்ற அமலறூபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னாரின் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்