யாழ். புங்குடுதீவு 2 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,
கலையரசி நகைமாட உரிமையாளருமான
பழநிநாதன் நெடுஞ்செழியன் அவர்கள்
03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்
அன்னார் பழநிநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
குகராசா மற்றும் அமரர் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமரன் (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்), அருட்குமரன் (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரர் தேன்மொழி, கலைமகள், அறிவழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருவேணி, அமலகுகன், அஜந்தா, உருத்திரகுகன், லோஜினி, லோகேஸ்வரன், ஜெயரூபன், செந்துசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-02-2023 திங்கள் கிழமை காலை 08:30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் 09:30 மணியளவில் கிறிஸ்ர அரசர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,
அதன் பின்னர் உடையார் கட்டு சேமக்காலையில் அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.