யாழ் வல்வெட்டித்துறை கே.கே.எஸ் விதியை வசிப்பிடமாக கொண்டிருந்த
திருமதி கணேசலிங்கம் அன்னரத்தினம் 08-01-2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுசாமி புண்ணியவதி தம்பதிகளின் மகளும்
காலஞ்சென்ற தர்மலிங்கம் சிவகாமிப்பிள்ளை (ராசம்மா) தம்பதிகளின் மருமகளும்
காலஞ்சென்ற தர்மலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்
பிரதீப்குமார், ராதிகா, ரேணுகா, ராஜ்குமார், ரூபிகா, ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்
ஒளிவளர்மதி (ராதை), ஜீவகன், வீரா பாலசுப்பிரமணியம், அருளரசி, காலஞ்சென்ற கிரிதரன், காயத்ரி ஆகியோரின் அருமை மாமியாரும்,
கதிர், கனிமொழி, மனோரதன், மதுவந்தி, மயூரதன், ஆர்த்தி, அட்சயா, ஆருண்யா, லிசாயினி, அம்பிகன், ஷரன், கனிகா, தனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்
காலஞ்சென்றவர்களான சுந்தசாமி, பாசவடிவேல், புஸ்பவதி, கனகராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், மகேஸ்வரி, திருநாவுக்கரசு, வடிவாம்பிகை மற்றும் சந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11-01-2026 அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஊரணி இந்து மயானத்தில் தகனம் இடம்பெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.