யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, திருச்சி,வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமான,
அமரர் விசுவலிங்கம் சந்திரசேகரம் (குட்டியையா) அவர்கள் 08-02-2024 வியாழக்கிழமை (தை மாதம் 25ம் நாள்) அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் கனகம்மா தம்பதிகளின் (அளவெட்டி) ஏக புதல்வனும்,
காலஞ்சென்ற சோதிமதியின் அன்புக்கு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (சோமப்பா) சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் (வல்வெட்டித்துறை) அன்பு மருமகனும்,
காஞ்சனா (கமநல அபிவிருத்தித் திணைக்களம்,வவுனியா), ராணிமலர் விஸ்வநாதபிள்ளை (வல்வெட்டித்துறை), காலஞ்சென்றவர்களான காந்திமதி, குகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
11-02-2024 ஞாயிறு காலை 7.00 மணிக்கு, 5ஆம் ஒழுங்கை , கோவில்புதுக்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று,
10.00 மணிக்கு கோவில்குளம் இந்துமயானத்துக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.