கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஐரோப்பாவிலும், அமெரிக்கா நியூயோக்கிலும் பணிபுரிந்து, கனடாவில் (Scarborough) வசித்தவருமான அமரர் முத்துத்தம்பி சபாநாதன் அவர்கள் 2014ம் ஆண்டு பங்குனி மாதம் பத்தாம் திகதி திங்கட்கிழமை அன்று பூர்வ தசமி திதியில் கனடாவில் தனது இல்லத்தில் (Scarborough, Toronto, Canada) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் முத்துத்தம்பி அமரர் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அமரர் ஆறுப்பிள்ளை அமரர் செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,
அமரர் நாகம்மா சபாநாதன் (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலம் சென்ற அருமை மகள் திருவருட்செல்வி (தேவா), அருமை மகன் முரளிதரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ஆரணியின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷ்ன், பவிஷன், ஹரிஷன் (லண்டன்) ஆகியோரின் பேரனும்,
காலம் சென்ற செல்வமனோகரன், காலம்சென்ற மகேஸ்வரி மற்றும் இராசேந்திரம் (ஜேர்மனி), ஸ்ரீரங்கநாயகி (சிறி - கொக்குவில்), பிறேமநாதன் ( செல்லக்கிளி - கனடா), கலாறஞ்சிதநாயகி ( ராணி கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமரர் அப்பாத்துரை (கணக்கியளாளர், கொழும்பு), அமரர் சபாரட்ணம், பராசக்தி, பத்மராஜா, சிவராணி(எலிசபா), அமரர் பன்னீர்ச்செல்வன் ஆகியோரின் மைத்துணரும்,
கயல்விழி, ரணேஸ், கயந்தினி, விரூஷன் (யோனத்தன்), ஜெனிக்கா (பியூலா), ஆகியோரின் பெரிய தந்தையாரும்,
பத்மகாந்தன், ரவிகாந்தன், கீதா, ராதாகாந்தன், சிவாகாந்தன், பவாகாந்தன், அனுஜன், சாருஜன் மற்றும் லண்டனில் வசிக்கும் வர்சினி – றஜீவன், கொக்குவிலில் வசிக்கும் நதுர்சன், கோபினி ஆகியோரின் பெரிய மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் 23 March 2014இல் நடைபெற்றது..