நினைவு அஞ்சலி
பிறப்பு
28 5 1934
இறப்பு
26 9 2011
அமரர் நல்லநாயகி இராஜரட்ணம்
14ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லநாயகி இராஜரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா
என்றே மனம் தேடுகின்றதம்மா

உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!

இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க!!!

உன் நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை
அன்றில்லை, இன்றில்லை என்றுமே!
எங்கள் உடலில் உயிர் உள்ள வரை உங்கள் நினைவுகள்
என்றும் அழியா பொக்கிஷம் அம்மா!

ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அம்மா, இவ் பூவுலகில் பிறந்த அனைவரிற்கும் வேத மந்திரம் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தை. யாராக இருப்பினும் அவர்கட்கு அவர்களின் தாய்க்கு நிகர் வேறுயாருமிலர். இருப்பினும் என தாய் எனக்கு மிகவும் சிறப்பானவர். சிறுவயது முதல் இறைவனடி சேரும் வரையான காலத்தில் எனக்கும் என் அம்மாவிற்குமான பந்தம் பல பரிமாணங்களை கொண்டது. ஓர் தாயாக, சகோதரியாக, தந்தையாக, தோழியாக, குருவாக, ஆலோசகராக சில சமயங்களில் தாதியாக என வாழ்க்கை காலத்தின் அனைத்து படிநிலையிலும் என்னோடிருந்து, எனது விருப்பங்களை தெரிந்து, அவற்றிற்கு இடையூறாக இல்லாது என் விருப்பிலுள்ள நன்மை தீமைகளை எடுத்து சொல்லி சரியான வழியில் என் விருப்பங்களை நான் பூர்த்தி செய்யவும் காரணமாயிருந்த என் தாயே என்னுடைய பலம். அம்மா நீங்கள் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்து ஈர் ஐந்து ஆண்டுகள் கடந்த போதும் உங்கள் சிரித்த முகம் இப்போதும் கண்முன்னே வந்து போகிறது. உங்கள் ஒவ்வோர் வார்த்தையும் அத்தனை அர்த்தங்களை சொல்கின்றது. நீங்கள் இல்லா இவ் கணப்பொழுதுகள் உங்கள் அருமையை எமக்கு புரிய வைக்கின்றன. பிறவி பயனை முடித்து இறைசிவன் பாத கமலங்களை நாடி சென்ற தங்கள் ஆத்மா பிறவா பேரின்ப பெருவாழ்வு பெற்று வாழ இறைசிவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி! சாந்த !! சாந்தி !!! அம்மா உங்கள் நினைவுடன், அன்பு மகன் விதுரன். மருமகள் ஷிமறி பேரன் சேரன்...
Tribute in Light
My deepest sympathies to you and your family