இணுவிலை பிறப்பிடமாகவும் சுதுமலை. மானிப்பாய். கொழும்பை வதிவிடமாகவும் கொண்டி ருந்த திரு. கணபதிப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 29.08.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி. சின்னம்மா தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற மானி மகளிர் கல்லூரி இளைப்பாறிய ஆசிரியர் பத்மாவதி அவர்களின் அன்பு கணவரும் கேதீஸ்வரன் (கண்ணன்). கேதார கௌரி (சியா). காலஞ்சென்ற கேதீஸ்வரி (செல்வா). கேதாரநிமலன் (நிமால்) ஆகியோரின் அன்பு தந்தையாரும் காலஞ்சென்றவர்களான குணபாக்கியம் கதிரவேற்பிள்ளை. கணபதிப்பிள்ளை சின்னத்துரை ஆகியோரின் அன்பு சகோதரரும் காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை. சுபத்திரை ஆகி யோரின் அன்பு மைத்துனரும் வள்ளுவன். ராஜினி. ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும் சாத்மிகா. அஜந்தன், பிரஜகி. சப்தகி. அபிநயா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01.09.2022 வியாழக்கிழமை அன்று 9.00 - 2.00 மணி வரை மகிந்த மலர்ச்சாலையில் (591, Galle Road, Mountlavania) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கல்கிஸை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.