Tribute in Light
அன்புத் தோழிக்கு கண்ணீர் அஞ்சலி
பள்ளி நாட்களின் இனிய நினைவாய் நீ,
என் உடன்பிறவா சகோதரியாய் என் மனதில் வாழ்ந்தவள் நீ.
பாசம் நிறைந்த தோழியாய் நீ.
சிரிப்பால் எங்கள் மனதை மலரச் செய்தாய்,
இன்று நினைவாக மட்டும் எங்களை விட்டு சென்றாய்.
உன் பிரிவு ஏற்றுக்கொள்ள முடியாத வலி ,
உன் பிரிவு தாங்க முடியாத வலி,
ஆனால் நீ விட்டுச் சென்ற அன்பான நினைவுகள்
என்றும் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
இறைவன் உன் ஆன்மாவிற்கு சாந்தி அளிக்கட்டும்.
உன் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பை தாங்கும் மனவலிமையை அருளட்டும்.
கண்ணீர் அஞ்சலி, அன்புத் தோழியே.என் உடன்பிறவா சகோதரியே.
உன் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.
இப்படிக்கு
உடன்பிறவா சகோதரன்
ரகு (இராகுலன்)London