மரண அறிவித்தல்
பிறப்பு
3 12 1972
இறப்பு
16 7 2026
செல்வி திருத்திகா கைலாசபதி
வயது 53

இலங்கை, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த
செல்வி கைலாசபதி திருத்திகா அவர்கள், 16.07.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கைலாசபதி, திருவருட்செல்வி கைலாசபதி தம்பதிகளின்  சிரேஷ்ட புத்திரியும்,
திருத்திகரன், திருமுருகன், திருஞானகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியைகளும், 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, இலகடி   வீதி, கரவெட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும்  இறைவனைப் பிரார்த்திப்போம். 
 
தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Share with your friends
Tribute 8 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்புத் தோழிக்கு கண்ணீர் அஞ்சலி பள்ளி நாட்களின் இனிய நினைவாய் நீ, என் உடன்பிறவா சகோதரியாய் என் மனதில் வாழ்ந்தவள் நீ. பாசம் நிறைந்த தோழியாய் நீ. சிரிப்பால் எங்கள் மனதை மலரச் செய்தாய், இன்று நினைவாக மட்டும் எங்களை விட்டு சென்றாய். உன் பிரிவு ஏற்றுக்கொள்ள முடியாத வலி , உன் பிரிவு தாங்க முடியாத வலி, ஆனால் நீ விட்டுச் சென்ற அன்பான நினைவுகள் என்றும் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும். இறைவன் உன் ஆன்மாவிற்கு சாந்தி அளிக்கட்டும். உன் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பை தாங்கும் மனவலிமையை அருளட்டும். கண்ணீர் அஞ்சலி, அன்புத் தோழியே.என் உடன்பிறவா சகோதரியே. உன் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். இப்படிக்கு உடன்பிறவா சகோதரன் ரகு (இராகுலன்)London
Tribute in Light
அன்பு தோழியே... உடன் பிறக்கவில்லை, ஆனால் ஒன்றாய் வளர்ந்தோம். ஒரே பள்ளியின் பாதையில், ஒரே ஊரின் காற்றை சுவாசித்து, சிரிப்பையும் கனவுகளையும் பகிர்ந்தோம். இன்றோ... வாழ்க்கைப் பயணத்தின் பாதியிலேயே எங்களைத் தனிமையில் விட்டுவிட்டு எங்கே சென்றாய் தோழியே? உன் சிரிப்பின் ஓசை இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது; உன் நினைவுகள் என் இதயத்தில் கண்ணீராய் வழிகின்றன. இறைவன் உன்னை தன் அரவணைப்பில் சேர்த்திருந்தாலும், எங்கள் மனங்களில் நீ என்றும் அழியாத நினைவாகவே வாழ்வாய். கண்ணீரோடு உன்னை வழியனுப்புகிறோம்... அன்புத் தோழியே, உன் ஆன்மா இறைவனின் திருவடியில் நித்திய அமைதி பெறட்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பி திருத்திகா
Tribute in Light
ஆழ்ந்த அனுதாப ங்கள் நண்பி கீத்தா ஓம் சாந்தி