இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கை நாட்டின் வடபகுதியில் உள்ள யாழ்க்குடாநாட்டிலே வலிகாமம் தெற்குப் பிரேதசத்திற்குட்பட்ட பிரேதசத்தில் சுன்னாகம் தெற்கில் சிவபூதராயருக்த் தொண்டாற்றி வந்த அடியார்களின் வழிவந்த சங்கரப்பிள்ளை பொன்னம்பலம் (Superintendent of Surveyors), பொன்னம்மா தம்பதிகளுக்கு மூத்த புதல்வியாக நேசமணி அவர்கள் 1938ம் ஆண்டு ஆனி 23ம் நாள் (07/07/1938), வியாழக்கிழைம பிறந்தார்.
அமரர் நேசமணி அவர்கள் மூத்த சகோதரர்களான சிவலிங்கம், கேணசலிங்கம் இழைய சகோதரர்களான செம்மண்ணச்செல்வி, சந்திரமதி ஆகிேயாருடன் இளம் பிராயைத கழித்து வந்தார். இவர் தனது கல்வியை இராமநாதன் மகளிர் கல்லூரியில் பயின்றார்.
அமரர் நேசமணி அவர்கள் அளெவட்டி கும்பளாவைளப் பிள்ளையாரைக்கு தொண்டாற்றி வந்த அடியவர்களின் வழிவந்த சங்கரப்பிள்ளை செல்லப்பா (ஆசிரியர்), பசுபதிநாயகி தம்பதிகளின் மூத்த புதல்வன் செல்வபாஸ்கரதுரைநாயகம் (பாஸ்கரன்) அவர்கைள 1964ம் ஆண்டு திருமணம் செய்து கொழும்பு நகரத்தில் வாழ்ந்த காலத்தில் செல்வரஞ்ஜன் (ரஞ்ஜன்) என்னும் புதல்வனும் பிரதாயிநி (பிரதா) என்ற புதல்வியும் பிறந்தார்கள்.
1973ம் ஆண்டு சுகாதாரப் பரிசோதகரா பணியாற்றிய கணவர் யாழ் மாநகர சைபக்கு இடமாற்றம் கிடைத்தபின் சுன்னாகத்தில் வாழ்ந்துவந்தார். இவர் சித்திரத் தையல், புகைப்படம் எடுத்தல், ரோஜா செடிகள் வளர்த்தல், திராட்சை தோட்டம் வளர்த்தல் என்பவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
மகன் யாழ் இந்துக் கல்லூரியிலும், மகள் உடுவில் மகளிர் கல்லூரியிலும் சீரய கல்வி பெற உந்து சக்தியாகவும் உறுதுணையாகவும் இருந்தார். தன் பிள்ளைகைள இலண்டன் மாநகரில் கல்வி பயில ஆவன செய்தார். தன் கணவருடன் பகரின் நாட்டில் வசித்த காலத்தில், விடுமுறைகளில் இலண்டன் வந்து பிள்ளைகளின் நலன்கைள கவனித்து வந்தார்.
அவர்களின் நல் மனதிற்கேற்ப நல்ல மருமக்களும் கிடைத்தார்கள். மகன் செல்வரஞ்ஜனுக்கு கைலவாணி, மகள் பிரதாயினிக்கு நிர்மலசங்கரும் துணைவர்களாகக் கிடைத்தனர். இப்பிள்ளைகளின் திருமண வைபங்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக செய்துவைத்திருந்தார்.
அமரர் நேசமணி அவர்கள் கணவருக்கு ஏற்ற நாயகியாக பலவழிகளிலும் விளங்கி இல்லறம் என்னும் நல்லறத்தை செவ்வனே நடத்தி வந்தார்.
இவர்களுக்கு ஆண்டவன் நர்மதா, திவ்யா, பிரவீன், அமரர் ஸிவராம், ஸுபன், ஸங்கமி என்ற பேரப்பிள்ளைகளின் ஆனந்தத்தை வழங்கினார். 2000ம் ஆண்டு முதல் இலண்டனில் தன் கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
யாரைம் எளிதில் கவர்ந்துவிடும் சுபாவம் உடையவர். நீண்ட காலமாக சந்திக்காத பல உறவினர்களையும், நண்பர்களையும் தொலைலேபேசி மூலம் இணைத்து பேசி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைவார். பரோபகார சிந்தனை உள்ள இவர் தன் உறவினர் நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பின்னிக்கவில்லை.
தனது இறுதிகாலத்தில் பெரும்பகுதியை தன் பேரக்குழந்தைகளுடனே கழித்தார். அவர்களுக்கு ஆசானாகவும், விளையாட்டு தோழியாகவும் இருந்தார். அவர்களும் தம் பாட்டியின் மீது மிகுந்த பாசமுடன் இருந்தனர்.
குலதெய்வங்களாகிய அம்பாள், சிவபூதவராயர் கோயில்களுக்கு திருப்பணி உதவிகள் தொடர்ந்து செய்துவந்தார். மெஞ்ஞானத்தை தேடுவதில் நாட்டமும் ஈடுபாடும் கொண்டிருந்தார். யோகிகளையும் அறிஞர்களையும் நாடி ஆசியும் அருளையும் பெரும் வழக்கமுடையவர். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகள் மீது மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டவர்.
இறுதிவரை தனது கருமங்கள் அனைத்தையும் தானே செய்து வந்தார். 2016ம் ஆண்டு இறுதியில் உயிரற்ற உடல்போன்று உணர்வற்று இருந்த இவரின் நிலை தெய்வாதீனமாகத் தேறியது. உடல் நிலை தேறி பல மாதங்கள் வாழ்ந்த இவர் 2018ம் ஆண்டு தை மாதம் 2ம் நாள் (15/01/2018), திங்கட்கிழைம பூதவுடல் நீத்துப் புகழுடன் இறைபதம் எய்தினார்.
அன்னார் ஆன்மா சாந்தியுற்று நற்கதியைடய வேண்டுமென இறைபதம் பணிகுவோம்.
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!