நினைவு அஞ்சலி
பிறப்பு
16 2 1934
இறப்பு
21 10 2022
அமரர் தெளிவத்தை ஜோசப்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்)

தெளிவத்தை ஜோசப் அவர்கள் இன்று (21) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 88.

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: பெப்ரவரி 16, 1934) ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.

தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.

காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.

தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றார்.

Sahithya Rathna Theliwata Joesph Passed away. 
Remains at Wattala Mahinda Florist and funeral will be held at Madampitiya (Colombo 04) on 23rd Oct.2022 Sunday

தகவல்: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

. - .
Share with your friends
Tribute 5 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள்.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Tribute in Light
எழுத்துலகின் நாயகனே! தமிழ் நடையால் இதயங்களை கொள்ளையடித்தவனே! நின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் ஆறு. சிறீகாந்தன் - மொன்றியால் - கனடா.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் .. ஆத்மா சாந்தியடைய இறைவன் துணை புரிவாராக ?
Tribute in Light
கண்ணீர் அஞ்சலிகள்